தம்பி வாங்கிய ரூ.300 கடனை திருப்பிக்கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் அண்ணனை அரிவாளால் வெட்டிய அதிர்ச்சி சம்பவம் திருநெல்வேலியில் அரங்கேறியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்து தான் வருகிறது. அந்தவகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் தம்பி வாங்கிய கடனுக்காக அண்ணன் கொலைசெய்யப்பட்டுள்ளார். திசையன்விளை விஜயஅச்சம்பாடு மேலத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (42). இவரது தம்பி கனகராஜ். இவர் அதே பகுதியை சேர்ந்த சுந்தர் என்பவரிடம் ரூபாய் 300 கடனாக வாங்கியுள்ளார். ஆனால் அதனை திருப்பிக் கொடுக்காமல் அலைகழித்து வந்துள்ளார்.
இருப்பினும், கடந்த மே 8ஆம் தேதி சுரேஷ்குமாரிடம் அவரது தம்பி வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு சுந்தர் கேட்டதாகவும், அதற்கு சுரேஷ்குமார் பிறகு தருகிறேன் என பதில் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுந்தர், சுரேஷ்குமாரையும், அவரது தம்பியையும் தகாத வார்த்தைகளால் திட்டி, கையில் வைத்திருந்த அரிவாளால் சுரேஷ்குமாரை தாக்கி மிரட்டி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் ரத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ்குமார் திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். இதனை அடுத்து நேற்று சுந்தர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.