சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த வீராச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் கூலித் தொழிலாளி. இவர் கடந்த ஒரு வருடமாக 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி பெற்றோருக்கு தெரியாமல் சிறுமியை திருமணம் செய்து கொண்டார். ஆனால், இந்த திருமணத்தை சிறுமியின் பெற்றோர் ஏற்கவில்லை. இதனால், பெற்றோருடனே சிறுமி இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத போது மூர்த்தி, சிறுமியை தனிமையாக சந்திக்க வந்துள்ளார். அப்போது இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். இதனால், சிறுமி தற்போது இரண்டு மாதம் கர்ப்பமாக உள்ளார். இது குறித்து சங்ககிரி ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர் அம்சவல்லிக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்ததில், சிறுமி குழந்தை திருமணம் செய்து கர்ப்பமாக இருப்பது உறுதியானது.

இது குறித்து சங்ககிரி அனைத்து மகளிர் போலீசில் அம்சவல்லி நேற்று புகார் அளித்தார். புகாரின் பேரில் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய மூர்த்தி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : எடப்பாடியில் கஞ்சா விற்பனை படுஜோர்!. இருவேறு இடங்களில் விற்பனை செய்த 2 பேர் கைது!. போலீசார் விசாரணை!