சென்னை அடுத்த மேடவாக்கம் பகுதியை சேர்ந்த பாசில் அகமது இன்ஜினியரான இவர், ஐ.டி நிறுவனம் நடத்தி வருகிறார். அவருடைய நிறுவன விரிவாக்கத்திற்கு ரூ.10 லட்சம் தேவைபட்டுள்ளது. இந்நிலையில், இதுபற்றி, வடபழனியில் உள்ள தனது நண்பர் அபிஷேக்கிடம் இது பற்றி கூறியுள்ளார். அதற்கு அவர், தான் அந்த பணத்தை கடனாக தருவதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பாசில் அகமது தனது மற்றொரு நண்பரான விஜய் என்பவரை அழைத்து கொண்டு, நேற்று முன்தினம் அபிஷேக் வீட்டிற்கு பணம் வாங்க சென்றுள்ளனர்.அங்கு, அபிஷேக்கிடம் ரூ.10 லட்சத்தை பெற்று, விஜய்யிடம் கொடுத்துள்ளார். பின்னர், இருவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றுகொண்டிருக்கும் போது சிறிது தூரம் சென்றதும், பாசில் அகமது தனது காசோலையை அபிஷேக் வீட்டில் மறந்து வைத்துவிட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பணத்தை எடுக்க அபிஷேக் வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர், அங்கிருந்து திருப்பி வந்து பார்த்த போது, ரூ.10 லட்சத்துடன் விஜய் மாயமானது தெரியவந்துள்ளது. அதிர்ச்சியடைந்த பாசில் அகமது சம்பவம் குறித்து வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து தப்பி ஓடிய விஜய்யை தீவிரமாக தேடிவருகின்றனர்.
Read More : ”இனி இந்த பொருளும் ரேஷன் கடைகளில் கிடைக்கும்”..!! தமிழ்நாடு அரசு சொன்ன குட் நியூஸ்..!!