கோனேரிப்பட்டியில் மலைத்தேனீக்கள் கொட்டியதில் மீன் கடை தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கோனேரிப்பட்டி பூமணியூரை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 48). இவர், கோனேரிப்பட்டியில் உள்ள மீன் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று மதியம் முத்துசாமி, தனது நண்பருடன் கோனேரிப்பட்டி பிரிவு அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்துக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது, அங்கிருந்த மரத்தில் இருந்து பறந்து வந்த மலைத்தேனீக்கள் முத்துசாமியை சூழ்ந்து கொண்டு கொட்டியுள்ளன. இதில், வலி தாங்க முடியாமல் கதறி துடித்துள்ளார். பின்னர், அங்கேயே சரிந்து மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இதையடுத்து, அவரை ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : ’முதல்வர் ஸ்டாலின் இதை மட்டும் செய்துவிட்டால் நான் அரசியலை விட்டே போயிடுறேன்’..!! அண்ணாமலை சவால்..!!