பொதுவாக பலவிதமான திருட்டு சம்பவங்களை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இந்த திருட்டு சம்பவம் சற்று வேற ரகம் தான். மது போதை ஆசாமி ஒருவர் அரசு சொத்தின் மீது கை வைத்த சம்பவம் தான் போலீசாரையே அதிர வைத்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத்தில் நேற்று இரவு அரசுப் பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுனர் பச்சைமுத்து என்பவர் சாப்பிட சென்றுள்ளார். நீண்ட நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது அரசுப் பேருந்து காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக பச்சைமுத்து அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் இரவு முழுவதும் அரசுப் பேருந்தை தேடி வந்தனர்.
அப்போது, சங்ககிரி அருகே உள்ள தீரன் சின்னமலை நினைவிடத்திற்கு அருகே பேருந்து நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், விரைந்து சென்ற போலீசார் பேருந்தில் ஏறி பார்த்தபோது மது போதை ஆசாமி ஒருவர் ஹாயாக படுத்திருந்தார். அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் ஊத்தங்கரையை சேர்ந்த சண்முகம் என்பதும், வேலை தேடி திருச்செங்கோட்டிற்கு வந்ததும் தெரியவந்தது. மேலும், மது அருந்திவிட்டு அரசுப் பேருந்தை ஓட்டி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, சண்முகம் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆதர படுத்தி சிறையில் அடைத்தனர்.
Read More : இந்தியன் வங்கியில் நகைக்கடன் வைப்பவர்களுக்கு சூப்பர் ஆஃபர்..!! கட்டணத்தில் இருந்து முழு விலக்கு..!!