சேலம் மகுடஞ்சாவடி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் தாய், மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் இலந்தகுட்டை பகுதியை சேர்ந்தவர் சுலோச்சனா. இவரது மகன் தமிழ்ச்செல்வன். இருவரும் மகுடஞ்சாவடி அருகே காளி கவுண்டம்பாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஈரோட்டிலிருந்து சேலத்தை நோக்கி சென்ற தனியார் பேருந்து, முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தாய்,மகன் இருவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Readmore: லஞ்சம் கேட்ட காவலர்..!! வீடியோ வைரலானதால் விபரீத முடிவு..!! அம்மாப்பேட்டை சாலையில் உறவினர்கள் போராட்டம்..!!