சங்ககிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த தனியார் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சங்ககிரி அருகே கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 20க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்ததில் திடீரென தீப்பிடித்து எறியத் தொடங்கியது.
மளமளவென பேருந்து முழுவதும் தீ பரவத் தொடங்கியதையடுத்து, அதிர்ச்சியடைந்த பயணிகள் உடனடியாக கீழே இறங்கினர். இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழந்த நிலையில், பேருந்தில் பயணித்தவர்கள் சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Readmore: வீட்டில் சமைக்கப்படும் இந்த உணவுகளும் ஆரோக்கியமற்றதுதான்!. ICMR எச்சரிக்கை!