சங்ககிரி அருகே 15 வயது சிறுமிக்கு திருமணம் செய்துவைத்த பெற்றோர், கணவர் உட்பட 4 மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்துவைத்தால் அது குழந்தை திருமணமாக கருதப்படும் என்றும் அக்குழந்தை திருமணம் சட்டப்படி குற்றம் என்றும் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் 21ஆம் நூற்றாண்டில் குழந்தை திருமணங்கள் ஆங்காங்கே நிகழ்ந்தும் வருகின்றன. அந்தவகையில், சேலம் சங்ககிரியில் 15 வயது சிறுமிக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன்(21) என்ற இளைஞருக்கு 15 வயது சிறுமியை கடந்த மாதம் பெற்றோர்கள் திருமணம் செய்துவைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் விரிவாக்க அலுவலர் யசோதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அப்பகுதி மக்களிடம் விசாரித்ததில் சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்துவைத்தது தெரியவந்தது.

இதையடுத்து, அலுவலர் யசோதா, சங்ககிரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், சிறுமியை குழந்தை திருமணம் செய்ததாக கணவர் பாலமுருகன், பெற்றோர்கள், சிறுமியின் தாய் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Readmore:எடப்பாடி மாணவியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிய எம்பி டி.எம்.செல்வகணபதி..!!