தமிழகத்தில் இன்று முதல் பால் விலையை உயர்த்தப்படுவதாக ஆரோக்யா நிறுவனம் அறிவித்துள்ளதால் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பொது மக்களின் அத்தியாவசிய பொருளான பால், அரசால் கொள்முதல் செய்து ஆவின் நிறுவனம் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தேவைக்கென 10 ரூபாய் முதல் கால் லிட்டர், அரை லிட்டர், ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தைப் போலவே தனியார் நிறுவனங்களும் பால் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் முன்னணி நிறுவனமான ஆரோக்யா நிறுவனம் இன்று முதல் பால் விலையை உயர்த்துகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ஒரு லிட்டர் பாலின் விலை ரூ.65ல் இருந்து 67 ஆக உயர்த்தப்பட இருக்கிறது.

இது குறித்து தமிழ்நாடு பால் முகவர் தொழிலாளர் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி கூறுகையில், ஆரோக்கியா நிறுவனம் பால் முகவர்கள் சுற்றறிக்கையில், பிற அண்டை மாநிலங்களில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி உள்ளனர், அந்த வகையில் தமிழகத்தில் பால் விற்பனை விலை இன்று முதல் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவித்தார் .

அந்த வகையில் நிறை கொழுப்பு பால் அரை லிட்டர் பாக்கெட் ரூ.36ல் இருந்து 37 ஆகவும், ஒரு லிட்டர் பாக்கெட் ரூ.65ல் இருந்து 67 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் அரை லிட்டர் ரூ.31 ல் இருந்து 32 ஆகவும், ஒரு லிட்டர் ரூ.58ல் இருந்து 60 ஆகவும், 400 கிராம் தயிர் பாக்கெட் ரூ.30 லிருந்து 32 ஆகவும், 500 கிராம் தயிர் ரூ.37 லிருந்து 38 ஆகவும், 1 கிலோ தயிர் ரூ.66-லிருந்து 68 ஆகவும் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Read More : மேட்டூரில் கைவரிசை காட்டிய வடமாநில கும்பல்..!! அடுத்தடுத்து 12 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் அபேஸ்..!!