மேட்டூர் அனல்மின் நிலைய குடியிருப்புகளில் 12 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் தொட்டிப் பட்டியில் மேட்டூர் அனல்மின் நிலைய குடியிருப்புகள் அமைந்துள்ளன. இங்கு ஏராளமான பணியாளர்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில், கடந்த செவ்வாய்க் கிழமை இரவு குடியிருப்புக்குள் நுழைந்த மர்ம கும்பல் அடுத்தடுத்த 12 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

அதாவது, மேட்டூர் அனல்மின் நிலையத்தில் உதவி பொறியாளராக பணிபுரியும் மோகனா என்பவர் வீட்டில் ஆறரை பவுன் தங்கம், இதேபோல் நோபீஸ்வரன் என்பவர் வீட்டில் ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் கோபாலாகிருஷ்ணன் என்பவர் வீட்டில் 11 சவரன் தங்க நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது. சம்பவம் குறித்த புகாரையடுத்து, மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் மற்றும் கருமலைக்கூடல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Readmore: கோடநாடு வழக்கில் இருந்து தப்பிய இபிஎஸ்..!! ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு கொடுக்க ஐகோர்ட் உத்தரவு..!!