தமிழகத்தில் 27 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவுபெறவுள்ள நிலையில், ஒட்டுமொத்த உள்ளாட்சி அமைப்புகளையும் கலைத்து தேர்தல் நடத்தலாமா என்ற ஆலோசனையில் தேர்தல் ஆணையம் இருப்பதாக வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட 27 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் வரும் டிசம்பருடன் காலாவதியாகிறது. எனவே 27 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுமா? அல்லது ஒட்டு மொத்த உள்ளாட்சி அமைப்புகளையும் கலைத்துவிட்டு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போதைய கணக்குப்படி, 2019 டிசம்பரில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களுக்கு 2024 டிசம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டும். 2021 செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடந்த உள்ளாட்சிகளுக்கு 2026 செப்டம்பரில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது தான் விதி. உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் வெற்றி, தோல்வி என்பது 2026 சட்டசபை தேர்தலில் நிச்சயமாக எதிரொலிக்கும் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
தற்போதுவரை ஒட்டுமொத்தமாக உள்ளாட்சி தேர்தலை முன்கூட்டியே நடத்தப்படுவது குறித்து எந்த முடிவையும் அரசு எடுக்கவில்லை. அதேநேரத்தில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, சரிபார்ப்பு பணியை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் குறித்த தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Readmore: அட்ராசக்க!. ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைவு!. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..!!