பொதுவாக பருவ மழை, தொடர் மழை பெய்யும் காலங்களில் குளிர், காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், வேகமெடுக்கும். குறிப்பாக ‘அனாபிலஸ்’ கொசு கடிப்பதன் வாயிலாக மலேரியா காலரா மற்றும் டைபாயிட் சிக்-குன்-குனியா, வயிற்று தொற்று, காலரா, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். தொற்றுநோய்கள் பரவாமல் இருக்க, இதுபோன்ற பருவகாலங்களில் நம் முன்னோர் பல்வேறு வீட்டு வைத்தியங்களைச் செய்வார்கள். வீட்டிலோ, வீட்டுக்கு அருகிலோ கிடைக்கும் பொருள்களை வைத்தே கஷாயம் செய்து அதன்மூலம் நோய்களை அண்டாமல் விரட்டி விடுவார்கள்.
அந்தவகையில், சளி இருமலை குணமாக்க பாலில் சுக்கு,மிளகு மற்றும் மேலும் சில பொருட்களை சேர்த்து காய்ச்சி குடித்தால் மழைக்கால நோய்கள் அனைத்தும் சில தினங்களில் குணமாகிவிடும். தேவையான பொருட்கள்: சுக்கு – சிறு துண்டு, பால் – ஒரு கிளாஸ், ஏலக்காய் – ஒன்று, மிளகு – இரண்டு அல்லது மூன்று, தேன் – தேவையான அளவு.
செய்முறை: முதலில் ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு ஏலக்காய் எடுத்து அதன் விதைகளை தனியாக பிரித்து உரலில் போட்டு இடித்து பொடியாக்கி கொள்ளவும். அதேபோல் இரண்டு அல்லது மூன்று கருப்பு மிளகை உரலில் போட்டு இடித்து ஒரு சுக்கு ஏலக்காய் தூள் கொட்டி வைத்துள்ள தட்டில் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றிக் கொள்ளவும்.பசும் பால் கிடைக்காதவர்கள் பாக்கெட் பால் ஒரு கிளாஸ் ஊற்றிக் கொள்ளுங்கள்.
பால் ஒரு கொதி வந்ததும் இடித்து வைத்துள்ள கரு மிளகு,ஏலக்காய் மற்றும் சுக்குத் தூளை அதில் கொட்டி குறைவான தீயில் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும். காய்ச்சிய பாலை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து குடித்தால் சளி,இருமல்,தும்மல்,ஜலதோஷம் உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும். இந்த மூலிகை பாலை காலை,மாலை அல்லது இரவு என மூன்று தினங்கள் குடிக்க வேண்டும்.குழந்தைகளுக்கு 1/4 கிளாஸ் குடித்தால் போதுமானது.பெரியவர்கள் தாராளமாக ஒரு கிளாஸ் பால் பருகலாம்.
Readmore: டீ, பிஸ்கட் முதல் ஷாம்பு வரை!. உயரப்போகுது விலை!. வெளியான முக்கிய தகவல்!