கேரள ரயில் விபத்தில் உயிரிழந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கேரள மாநிலம் பாரதப்புழா ஆற்றின் மேல் உள்ள பாலத்தில் ரயில்வே தடங்களைச் சுத்தம் செய்து கொண்டிருந்த போது தண்டவாளத்தின் வழியே வந்த கேரள எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், தமிழர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். சேலம் பகுதியை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த விபத்தில், லட்சுமணன், ராணி, வள்ளி ஆகியோர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
இவர்களின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று கூறப்பட்டுள்ளது.