இந்தியாவில் நீரிழிவு நோய் ஒரு பெரிய பொதுச் சுகாதார சவாலாகத் தொடர்கிறது. மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையும் இந்திய மருத்துவ ஆய்வு மன்றமும் இணைந்து 2023ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில், இந்தியாவில் கிட்டத்தட்ட 101 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டது.மேலும், 136 மில்லியன் மக்கள் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலைகளில் இருப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த ஆய்வுக்கு முன்னர், இந்தியாவில் நீரிழிவு நோயுடன் வாழும் மக்களின் எண்ணிக்கை 77 மில்லியனாக இருந்தது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது. உலகின் நீரிழிவு நோய்க்கானத் தலைநகரமாக இந்தியா இருப்பதற்கு அந்நாட்டு மக்கள் கேக் போன்ற பேக்கரி உணவுகள், சிப்ஸ், சமோசா போன்ற வறுத்த உணவுகளையும் மயோனீஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் அதிகம் உண்பதே காரணம் என ஆய்வு கூறுகிறது.
International Journal of Food Sciences and Nutrition இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் உள்ளிட்டவை நிறைந்த low-AGE டயட்டை பின்பற்றுவது அதிக எடை மற்றும் உடல் பருமனாக உள்ளவர்களுக்கு ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸ் மற்றும் இன்ஃபளமேஷனை குறைக்கும் என்று தெரியவந்துள்ளது.
அதிக அளவில் பதப்படுத்தப்பட்ட உணவுகள், கொழுப்பு, சர்க்கரை, உப்பு மற்றும் AGE உணவுகள் நாள்பட்ட நோய்களின் அபாயத்தை அதிகரிப்பதாக முந்தைய ஆராய்ச்சி காட்டுகிறது. இந்திய உணவுமுறைகளில் AGE-க்கள் பற்றிய தரவு மற்றும் கார்டியோமெட்டபாலிக் மார்க்கர்ஸ்களில் அவற்றின் தாக்கம் குறைவாக இருந்தாலும், சமீபத்திய இந்த ஆய்வு அந்த இடைவெளியை நிரப்புவதை நோக்கமாக கொண்டுள்ளது. குறிப்பாக இந்தியர்கள் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ், டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
குளுக்கோஸ் மற்றும் லிப்பிட் மெட்டபாலிசம், ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸ் மற்றும் அதிக எடை மற்றும் உடல் பருமனான இந்தியர்களிடையே காணப்படும் இன்ஃபளமேஷன் ஆகியவற்றில் லோ மற்றும் ஹை AGE டயட்களின் விளைவுகளை ஆய்வு ஆராய்ச்சி செய்தது. நீரிழிவு நிலை இல்லாத 38 நபர்கள், அதிக எடை அல்லது பருமனானவர்கள் என பரிசோதனையில் பங்கேற்றவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.