இந்த ஆண்டு நவம்பரில் தென்னிந்திய பகுதிகளில் இயல்பைவிட அதிகனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில், தென்னிந்திய பகுதிகளான தமிழ்நாடு, காரைக்கால், கடலோர ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதத்தில் இயல்பை விட அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில் நவம்பரில் இயல்பை விட 123% அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழ்நாடு, காரைக்கால், ஆந்திரா பகுதிகளில் பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 2 ஆவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும். அதாவது இயல்பை விட 23% அதிகமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்த சலனங்களும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடல்சார்ந்த நிகழ்வுகள் எல்லாம் நமக்கு சாதகமாக இருக்கக்கூடிய நிலையில், நவம்பர் முதல்வார இறுதியில் உருவாகக்கூடிய அந்த சலனம், அதைத் தொடர்ந்து உருவாகும் சலனங்கள் எல்லாம் நமக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்கள் இதனால் அதிகப்படியான மழை பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: HBD Salem | நம்ம மாங்கனி மாவட்டத்திற்கு இன்று 159வது பிறந்தநாள்!. சேலத்தின் வரலாறு, சிறப்பம்சங்கள் இதோ!.