சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதை அடுத்து, ஏற்காட்டில் உள்ள விடுதிகளில் பல மடங்கு கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் தொடர் மழை காரணமாக குளுகுளு சீசன் களை கட்டியுள்ளது. இந்த சீசனை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படும்.
இந்தநிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது, தொடர் மழை காரணமாக அங்கு நிலவும் குளுகுளு சூழலில், மகிழ்ச்சியுடன் சுற்றுலா இடங்ளை கண்டு ரசித்தனர். மேலும் இன்று காலை முதலே ஏரி சாலை அண்ணா சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் 2, 3 மணி நேரம் கழித்து சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இருப்பினும், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால், ஏற்காடு விடுதிகளில் ரூ. 2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை கட்டணம் வசூலிப்பதாக விடுதி உரிமையாளர்கள் மீது புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Readmore: தேவூர் அருகே வெறிநாய்கள் அட்டகாசம்!. பட்டியில் இருந்த ஆடுகளை கடித்து குதறிய சோகம்!.