எடப்பாடி தேவூர் அருகே, பட்டியில் கட்டிவைக்கப்பட்டிருந்த ஆடுகளை வெறிநாய் கடித்து குதறியதில் 6 ஆடுகள் பலியாகின.

சேலம் மாவட்டம் தேவூர் அருகே செட்டிபட்டி பகுதியில் வெறிநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், செட்டிப்பட்டியைச் சேர்ந்த குமார் விவசாயம் மற்றும் ஆடுகளை மேய்த்து வருகிறார். இந்தநிலையில், வழக்கம்போல், நேற்று முன் தினம் (அக்.31) மாலை ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுவிட்டு வீட்டின் முன்புறம் கட்டி வைத்துவிட்டு தூங்க சென்றுள்ளார். இதையடுத்து, நேற்று அதிகாலை பட்டிக்கு சென்று பார்த்தபோது ஆடுகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

வெறிநாய்கள் கடித்ததில் ஆறு ஆடுகளும் பலியாகி உள்ளது தெரியவந்தது. அடிக்கடி இது போன்று வெறிநாய்கள் ஆடுகளை கடித்து வருவதால் இந்த நாய்களை கட்டுபடுத்த அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஆடுகள் பலியானதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயி கவலையடைந்துள்ளார்.

Readmore: பூலாம்பட்டி காவிரி ஆற்றில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு!. நண்பர்களுடன் தீபாவளி கொண்டாட்டத்தின்போது விபரீதம்!