சேலத்தில் மதுபோதையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறை தட்டிக்கேட்ட முதியவரை வீட்டை உடைத்து இளைஞர்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் சிவதாபுரம் அருகே பெருமாம்பட்டி, பூசநாயக்கனூர் காலனி பகுதியில் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் இளைஞர்கள் சிலர் மதுபார்ட்டி வைத்து அட்ராசிட்டி செய்துள்ளனர். அப்போது இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அவ்வழியாக சென்ற முதியவர் ஒருவர் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்களில் ஒருதரப்பினர், அந்த முதியவரை தேடி சென்றுள்ளனர். இதையடுத்து, அவரை வீட்டின் மேற்கூரையான ஆஸ்பெட்டாஸ் ஷீட்டை உடைத்து வீட்டிற்குள் குதித்து முதியவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த பெண்ணையும் இளைஞர் ஒருவர், தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. இவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பட்டப்பகலில் மதுபோதையில் முதியவரை இளைஞர்கள் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Readmore: சேலத்தில் பயங்கரம்!. பனியன் கம்பெனியில் பெரும் தீ விபத்து!. ரூ. 40 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்!