மேட்டூர் அணை நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், காவிரி டெல்டாவுக்கும் தண்ணீர் திறப்பு உயர்த்தப்பட்டுள்ளது.

கர்நாடகா திறந்த தண்ணீர் காரணமாக ஜூலை மாதம் ஆரம்பத்தில் 40 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், சில வாரங்களில் கிடுகிடுவென உயர்ந்து முழுக் கொள்ளளவை எட்டி கடல் போல காட்சியளித்தது. இதனால் காவிரி டெல்டா பாசனத்திற்காகவும் கடந்த மூன்று மாதங்களாக தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 14,273 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 10,568 கன அடியாக குறைந்துள்ளது. இந்த நிலையில் மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 108.50 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 76.29 டிஎம்சியாக அதிகரித்துள்ள நிலையில், நீர்வரத்து என்பது படிப்படியாக குறைந்து 10,568 கன அடியை எட்டியுள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டாவுக்கு தண்ணீர் திறப்பு 2500 கன அடியில் இருந்து 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Readmore: சுகர் இருக்கா?. இனி வெள்ளை அரிசியை தொடாதீங்க!. இந்த அரிசியில்தான் சத்துக்கள் அதிகம்!.