வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய நடத்தப்படும் சிறப்பு முகாம் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யப்படுகிறது. அதன்பின் ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அந்த வகையில், இந்தாண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நாளை தொடங்குகிறது. இதை முன்னிட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

தொடர்ந்து, நாளை முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் திருத்தம் செய்தல் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மற்றும் செயலி வாயிலாகவும் விண்ணப்பங்களை வழங்கலாம். நேரடியாக வாக்காளர் பதிவு அதிகாரியிடமும் உரிய படிவங்களை பெற்று விண்ணப்பிக்கலாம். இதுதவிர, பணியாற்றுவோர் வசதிக்காக, 4 வார இறுதி நாட்களில் தமிழகம் முழுவதும் உள்ள 69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில், சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

முன்னதாக, இந்திய தேர்தல் ஆணையத்தால் நவ. 9, 10 மற்றும் 23, 24 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடக்கும் என அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், நவ.9ம் தேதி தமிழக அரசால் பணி நாளாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சிறப்பு முகாம் நாட்களில் நவ 9 மற்றும் 10ம் தேதிக்குப் பதில், நவ.16, 17 ஆகிய இரு தினங்களும் முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ அறிவித்துள்ளார்.

Readmore: எடப்பாடியில் பிரம்மாண்டம்!. வசந்த் & கோ-வின் 122-வது கிளை திறப்பு!. எம்.பி. விஜய்வசந்த் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!