சர்க்கரை நோய் வந்ததும்தான் நாம் எப்போதும் உடல் ஆரோக்கியத்தை பற்றி யோசிக்கவே செய்வோம். இந்நிலையில் சர்க்கரை நோயாளிகள் மட்டும் அல்ல உடல் பருமனாக இருப்பவர்கள் கூட வாழ்வை ஆரோக்கியமாக மாற்ற வேண்டும்.சர்க்கரை நோய் வந்ததும்தான் நாம் எப்போதும் உடல் ஆரோக்கியத்தை பற்றி யோசிக்கவே செய்வோம். இந்நிலையில் சர்க்கரை நோயாளிகள் மட்டும் அல்ல உடல் பருமனாக இருப்பவர்கள் கூட வாழ்வை ஆரோக்கியமாக மாற்ற வேண்டும்.
இந்நிலையில் வெள்ளை அரிசி சாதத்தை நாம் முதலில் கைவிட வேண்டும். இந்நிலையில் இதற்கு மாற்றாக நாம் பிரவுன் அரிசி சாப்பிடலாம். இந்நிலையில் இந்த பிரவுன் அரிசியில் உமி அப்படியே இருக்கும். இந்த உமியைத்தான் நாம் பாலிஷ் செய்து வெள்ளை நிறத்திற்கு கொண்டு வருகிறோம். இந்நிலையில் இந்த பிரவுன் அரிசியில் உமி மற்றும் அதில் உள்ள சத்துக்கள் அப்படியே இருக்கும்.
பிரவுன் அரிசி ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருப்பதன் காரணமாக மக்கள் மத்தியில் சமீப காலமாக ஒரு பிரபலமான தேர்வாக மாறியுள்ளது. பிரவுன் ரைஸ் என்பது ஒரு முழு தானிய அரிசி வகையாகும். ஊட்டச்சத்து நிறைந்த பிரவுன் ரைஸ் ஆனது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், எடை குறைப்பை பராமரிக்கவும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. என்னதான் பாஸ்ட் புட் உணவை நாம் விரும்பி சாப்பிட்டாலும், நம்மில் பலர் ஒரு வேளையாவது ரைஸ் சாப்பிடுவதை தான் மிகவும் விரும்புகிறோம். இதனாலேயே நம் உணவில் அரிசி ஒரு முக்கிய அங்கமாகும். இது நாடு முழுவதும் மிகவும் விரும்பி உண்ணப்படுகிறது, ஆனால் சில காலமாக பிரவுன் ரைஸ்-இன் போக்கு மக்களிடையே வேகமாக அதிகரித்துள்ளது.
வெள்ளை சாதம் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. ஆனால், பிரவுன் ரைஸ் சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம். பிரவுன் ரைஸ் ஆனது குறைந்த கிளைசெமிக் இன்டக்ஸை கொண்டுள்ளது. எனவே இது சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை அளிக்கிறது. மேலும் டயட்டில் பிரவுன் ரைஸ் சேர்த்தால் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். இதய ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியமாகும். அந்த வகையில், பிரவுன் ரைஸில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே இது கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க மற்றும் உடல் எடையை குறைக்க விரும்பும் பலர் வைட் ரைஸ்-க்கு பதிலாக பிரவுன் ரைஸ்-ஐ உணவில் சேர்த்து கொள்கின்றனர். பிரவுன் ரைஸில் நார்ச்சத்து மற்றும் மக்னீசியம் நிறைந்துள்ளது, இது உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் எடை பராமரிப்புக்கு உதவுகிறது. எனவே இதை உணவை டயட்டில் சேர்த்துக் கொள்ளும் போது நீண்ட நேரம் முழுமையாக உணர வைக்கிறது. அதே போல இதிலிருக்கும் மாங்கனீஸ் எடையை குறைக்க உதவுகிறது.
பிரவுன் ரைஸில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்டிஇன்ஃபிளமேட்டரி பண்புகள் உள்ளன, இது ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ் மற்றும் தீங்கு விளைவிக்கும் ரேடியேஷனுக்கு எதிராக போராட உதவுகிறது. பிரவுன் ரைஸில் அதிக நார்ச்சத்து காரணமாக செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும், இது வீக்கத்தை குறைக்கிறது, வாயு மற்றும் மலச்சிக்கல் ஆகியவற்றைத் தடுக்க உதவுகிறது. எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: பிரவுன் ரைஸில் வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் கே ஆகியவற்றின் நல்ல மூலமாகும், இவை அனைத்தும் எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை, ஏனெனில் இது எலும்புகளின் அடர்த்தியை அதிகரிப்பதோடு, அவற்றை வலுப்படுத்துகிறது.
வெள்ளை அரிசி போல பிரவுன் ரைஸை நாம் சமைக்க இயலாது. இந்நிலையில் எப்படி சமைக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம். ஒரு கப் அரிசியை நன்றாக கழுவ வேண்டும். ஒரு கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் ஊற்றி, கிட்டதட்ட 8 விசிவ் வரும் வரை மிதமான தீயில் வைக்க வேண்டும். தொடர்ந்து சூடு ஆறியதும் பிரவுன் ரைஸ் ரெடி. அப்படி வேகவில்லை என்றால் கூடுதலாக தண்ணீர் சேர்த்து 3 விசில் வரை வைக்கவும். Brown rice-ல் அதிக நார்சத்து இருக்கிறது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. மேலும் இதை சாப்பிட்டால் ரத்த சரக்கரை அதிகரிக்காது. மேலும் இதில் குறைந்த கிளைசிமிக் இன்டக்ஸ் இருப்பதால் இது சரியான தேர்வாக இருக்கும். மேலும் இதில் மெக்னீஷியம், செலினியம், வைட்டமின் பி3 இருக்கிறது.
Readmore: திராவிட மாடல் என்று சொல்லிக்கொண்டு தமிழ்நாட்டை கொள்ளையடிக்கும் கூட்டம்..!! அட்டாக் செய்த விஜய்..!!