சேலத்தில் குக்கர் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் மதிப்புள்ள உதிரிபாகங்கள் எரிந்து சேதமடைந்தன.
சேலம் மூலப்பிள்ளையார் கோவில் வண்டிக்கார தெரு பகுதியில் ராஜஸ்தானை சேர்ந்த தேக்ராஜ் என்பவர், குக்கர் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்திவருகிறார். வழக்கம்போல், இரவு பணி முடிந்து ஊழியர்கள் மற்றும் மேலாளர் மாதேஸ் ஆகியோர் நிறுவனத்தை பூட்டி விட்டி வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் அந்த நிறுவனத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்த அந்த பகுதியினர் மேலாளர் மாதேசுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் அந்த நிறுவனத்தில் இருந்த குக்கர் தயாரிக்கும் பல லட்சம் மதிப்பிலான உதிரி பாகங்கள் எரிந்து சேதமானதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் மின் கசிவால் இந்த தீ விபத்து நடைபெற்றதாக கூறிய போலீசார், மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.
Readmore: சேலத்தில் தொடர் மழை எதிரொலி!. நோய் பரவும் அபாயம்!. டெங்கு கொசு ஒழிப்பு முன்னெச்சரிக்கை பணி தீவிரம்!