முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறுவது போல, ஜோசியம் பலிக்கும் என்றும் 2026ல் அதிமுக ஆட்சிதான் என்றும் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ”மு.க.ஸ்டாலின் அவர் செய்த சாதனையை நம்பி மக்களை சந்திக்கவில்லை. திமுகவின் சாதனையை நம்பி அவர்கள் தேர்தலில் நிற்பதாக தெரியவில்லை. கூட்டணிக் கட்சிகளை நம்பித்தான் அவர்கள் தேர்தலை சந்திக்கிறார்கள். அதன் மூலமாகத்தான் வெற்றி பெறுவதாக எல்லா கூட்டத்திலும் அவர் பேசிக் கொண்டிருக்கிறார். நாம் பேசவில்லை அவர்தான் பேசுகிறார்.

எங்கள் கூட்டணி வலுவான கூட்டணி; எங்கள் கூட்டணியில் விவாதங்கள் இருக்கும் பிரிவு இருக்காது என்றும் முதலமைச்சர் பேசுகிறார். கிராமத்தில் சொல்பவர்கள் ‘எங்க அப்பன் குதிருக்குள் இல்ல’ என்று இப்படித்தான் திமுக தலைவர் பேசி வருகிறார். கூட்டணி வலுவாக இருக்கிறது வலுவாக இருக்கிறது என பேசி வருகிறார்கள்.

அந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் திமுக அரசின் ஆட்சியைக் கடந்த 41 மாதமாக விமர்சனம் வைக்கவில்லை. ஆனால் இப்பொழுது விமர்சனத்தை முன் வைக்கிறார்கள் என்று சொன்னால் அந்த கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக தானே அர்த்தம். அப்படித்தானே புரிந்து கொள்ள முடியும். அதைத்தான் நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். நான் ஜோசியராகிவிட்டேன் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொல்கிறார், ஜோசியம் பலிக்கும், 2026ல் அதிமுக ஆட்சிக்கு வரும் கூறினார்.

Readmore: நோட்!. ரேஷனில் பொருட்கள் கொடுக்கவில்லையா?. இந்த நம்பருக்கு ஒரேயொரு SMS பண்ணுங்க!.