பம்பு செட்டுகளை தொலைவில் இருந்து செல்போன் மூலம் இயக்கவும், நிறுத்தவும் உதவும் கருவியை வாங்க விருப்பமுள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விதை மானியம், உர மானியம் மற்றும் பிஎம் கிசான் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.6000 உதவி தொகை, என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தநிலையில், செல்போன் மூலமாக விவசாய பம்பு செட்டுகளை இயக்கும் கருவியை தமிழக அரசு அரசு மானியத்துடன் வழங்கி வருகிறது. இதன் மூலம் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள பம்பு செட்டுகளை தொலைவில் இருந்து செல்போன் மூலம் இயக்கவும், நிறுத்தவும் உதவுகிறது.
இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் வெளியிட்ட அறிவிப்பில், திருப்பூர் மாவட்டத்தில் 250 பம்புசெட்டுகளுக்கு இந்த கருவி அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பழைய மின்மோட்டாரை மாற்றி புதிய மின்மோட்டார் வாங்குவதற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டும் அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் மானியமும், தரிசு நிலங்களில் சிறு தானிய சாகுபடிக்கு உழவு மானியமாக அதிகபட்சமாக ஹெக்டேருக்கு ரூ.5,400 மானியமும் வழங்கப்படும்.
விருப்பமுள்ள விவசாயிகள் திருப்பூர், உடுமலை, தாராபுரம் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் வேளாண் பொறியியல்துறை செயற்பொறியாளரை 94432 43495 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Readmore: சென்னையில் நிலஅதிர்வா?. தலைமைச் செயலக கட்டிடத்தில் விரிசல்!. பதறி ஓடிய அதிகாரிகள்!