வரும் அக்டோபர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் 8 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு தினம், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் சிறப்பு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் முக்கிய கோவில் திருவிழாக்களின் போது மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மதுக்கடைகள் மூடப்படும்.
இந்தநிலையில், வரும் அக்டோபர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுதந்திர போராட்ட வீரர்களான மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் குருபூஜை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நாளை(வியாழக்கிழமை) நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா, குருபூஜை வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது.
இந்த விழாக்களில் தமிழக அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் என சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்து வருகின்றனர். இந்த நிலையில், மருதுபாண்டியர் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தி விழாயை முன்னிட்டு மதுரையில் வருகிற 27, 28, 29 ஆகிய 3 நாட்களுக்கு மதுக்கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மனமகிழ் மன்றங்கள், தனியார் பார் உள்ளிட்டவை 3 நாட்கள் மூடப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Readmore: இனி இவர்களுக்கும் விவசாய நிலம்..!! ரூ.5 லட்சம் மானியம்..!! ஆனால் விண்ணப்பிக்க இதெல்லாம் கட்டாயம்..!!