கோவை – சீரடிக்கு வரும் 27ம் தேதி முதன்முறையாக நேரடி விமான சேவை தொடங்கப்படவுள்ளது.
இந்தியாவில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு பிறகு, சீரடிக்கு தான் அதிகம் பேர் வருவதாக முக்கிய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மும்பையிலிருந்து 300 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சீரடி என்ற இடம் சாய் பாபாவின் வீடு என்று அறியப்படுகிறது.
சீரடி சாய்பாபா வாழ்ந்த காலத்திலும் வாழ்ந்த பின்னரும் அனைவராலும் போற்றப்பட்டார். சாய்பாபாவுக்காக உலகம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் உள்ளனர். தினந்தோறும் லட்சக்கணக்கானோர் அவரைக் காண சீரடிக்கு சென்று கொண்டிருக்கின்றனர். சாய்பாபா பக்தர்களுக்கு ஒரு முறையாவது சீரடிக்கு சென்று சாய்பாபாவை பார்த்து விட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் எல்லாராலும் அவ்வளவு சுலபமாக அங்கு சென்று விட முடியாது.
ஆனால், இன மதம் மொழி ஆகிய பாகுபாடுகளை கலைந்து ஏழை முதல் பணக்காரர்கள் வரை போற்றி வணங்கக் கூடியவராக சீரடி சாய்பாபா விளங்கிவரும் நிலையில் நான் தூரமா இருக்குன்னுக்கான பக்தர்கள் பேருந்துகள் விமானங்கள் ரயில்கள் மூலம் சீரடிக்கு வந்து செல்கின்றனர். சீரடி வந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக கோவை விமான நிலையத்தில் இருந்து முதல் முறையாக சீரடிக்கு வருகின்ற அக்டோபர் 27ஆம் தேதி முதல் நேரடி விமான சேவை துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த செய்தி சாய் பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல்வேறு தரப்பினரும் இதனை வரவேற்றுள்ளனர்.
தினமும் கோவை விமான நிலையத்திலிருந்து காலை 11 மணிக்கு புறப்படும் விமானம் சென்னை வழியாக மாலை 3 10 மணிக்கு சீரடியை சென்றடையும். இன்று வரை கோவையிலிருந்து சீரடி செல்ல ரயில் சேவை மட்டுமே இருந்து வரும் நிலையில் வருகின்ற அக்டோபர் 27ஆம் தேதி முதல் சீரடிக்கு நேரடி விமான சேவை இயக்கப்பட உள்ளது.
Readmore: நீர்வரத்து 29,850 கன அடியாக அதிகரிப்பு!. மீண்டும் 100 அடியை தாண்டிய மேட்டூர் அணை!.