ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் தொல்குடி, நன்னிலம் மகளிா் நில உடைமைத் திட்டம், CM Arise ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களின் கீழ் பலனை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என அரசிதழ் வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் தொல்குடி, நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் ஆகியவை முழுக்க முழுக்க பெண்களுக்கானது. இந்த திட்டங்களின் மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண்கள் நிலம் இல்லையென்றால் விவசாய நிலம் பெற முடியும்.

முதல் கட்டமாக இந்த திட்டத்திற்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம். விண்ணப்பதாரர் மற்றும் உறவினர்கள் பெயரில் வாங்க முடிவுசெய்திருக்கும் நிலமும் 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சையாக இருக்கலாம். இந்தத் திட்டத்தின் வாயிலாக நிலம் இல்லாத ஒருவர் விவசாய நிலத்தை வாங்கும் போது, அவர் நிலத்தின் மதிப்பில் இருந்து 50% மானியமாக பெற முடியும் அல்லது அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.

அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலத்தை ஒருவர் இந்த திட்டத்தின் கீழ் வாங்கலாம். இந்நிலையில் தற்போது இந்தத் திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திட்டத்தின் பலனை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் CM Arise என்ற புதிய திட்டத்தின் கீழ் 35 சதவீத வட்டி மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை ஒருவர் தொழில் துவங்குவதற்கு கடன் பெறலாம். தற்போது இந்தத் திட்டத்திற்கும் ஆதார் எண் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கு சில வரைமுறைகள் உண்டு. அதன்படி, விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 55-க்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கும் அதிகமாக இருக்க கூடாது. மேலும், விண்ணப்பத்தாரர் எந்த விவசாய நிலத்தையும் சொந்தமாக வைத்திருக்கக் கூடாது மற்றும் அவரின் தொழில் விவசாயமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை!… 59 ஆயிரத்தை நெருங்கியது!. இல்லத்தரசிகள் ஷாக்!