நவம்பர் 1ஆம் தேதி முதல் டிஜிட்டல் பேமெண்ட்களுக்கு புதிய விதிகள் அமல்படுத்தவுள்ளதாக RBI வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஒவ்வொரு மாதமும் நிதி உள்ளிட்ட திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு புது புது விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தற்போது, அக்டோபர் மாதம் இன்னும் சில தினங்களில் முடிவடையவுள்ளது, இந்தநிலையில், ஆர்பிஐ ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளது. டிஜிட்டல் பேமெண்டுகளில் புதிய விதிகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன,

அதாவது, நவம்பர் 1ம் தேதி முதல், பேங்க் அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்கள் பேங்க் ஆப்கள், மொபைல் பேங்கிங் அல்லது நெட் பேங்கிங் மூலம் பணம் அனுப்பும்போது, எஸ்எம்எஸ் மூலம் ஓடிபி வெரிபிகேஷன் (OTP Verfication) செய்யப்படும். இதை கொடுத்தால் மட்டுமே அந்த பணத்தை அனுப்ப முடியும். இந்த ஓடிபி வெரிபிகேஷனிலேயே கூடுதல் அங்கீகரிப்பு காரணி (Additional Factor of Authentication) வருகிறது.

ஓடிபி மட்டுமல்லாமல் வேறு என்ன இருக்கும்? மூன்று அங்கீகார காரணிகள் இருக்கின்றன. இவை பணம் அனுப்பும்போது கேட்கப்படும். முதலாவதாக ஓடிபிக்கு அடுத்தப்படியாக, பாஸ்வேர்ட்கள் (Passwords), பாஸ்ப்ர்ஸெஸ் (Passphrases) அல்லது பின் (PIN) கேட்கப்படும். இதை கூடுதலாக பணம் அனுப்பம் அனுப்போது பேங்க் கஸ்டமர்கள் கொடுத்தால் மட்டுமே பரிவர்த்தனை முடியும்.

ஏடிஎம் கார்டு அல்லது சாப்ட்வேர் டோக்கன்கள் போன்று பேங்க் கஸ்டமர்களுக்கு பிரத்யேகமாக கொடுக்கப்படும் ஏதாவது ஒரு பிசிகல் டிவைஸ்கள் (Physical Devices) கூடுதல் அங்கீகரிப்பு காரணிகளாக சேர்க்கப்படும். இதில் கொடுக்கப்பட்ட நம்பர்களை பணம் அனுப்பும் நேரத்தில் கொடுக்க வேண்டும். மூன்றாவது வழக்கமான பயோமெட்ரிக் அடையாளங்கள் இருக்கின்றன.

அதாவது, ஃபிங்கர்பிரிண்ட் (Fingerprints) மற்றும் பேசியல் அங்கீகாரம் (Facial Recognition) கூடுதல் அங்கீகரிப்பு காரணிகளாக இருக்கிறது. இது ஆதார் கார்டு மூலம் பெறப்படும். ஆகவே, பேங்க் அக்கவுண்ட்டில் மொபைல் நம்பரை கொடுத்ததை போலவே, உங்களது ஆதார் விவரங்களும் சரியாக இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.

இல்லையென்றால் சிரமாகிவிடும். இந்த புதிய விதிகள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு பொருந்தினாலும், கார்டு மூலம் செய்யப்படும் ரூ.5,000 வரையிலான காண்டாக்ட்லெஸ் பேமெண்ட்களுக்கு பொருந்தாது. அதேபோல ஆஃப்லைன் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கும் இந்த விதிகள் பொருந்தாது. ஆகவே, ஓடிபி மட்டுமே கொடுத்து இனிமேல் பணம் அனுப்பிவிட முடியாது என்பது தெரிகிறது. இந்த விதிகள் நவம்பர் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Readmore: குட்நியூஸ்!. டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்!. எவ்வளவு கிடைக்கும் தெரியுமா..?