சேலம் கொங்கணாபுரத்தில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட வெண்டனூரை சேர்ந்தவர் கார்த்திகேயன், இவர், ஈரோட்டில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில், கடந்த 16ம் தேதி கார்த்திகேயன், அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் வெளியே சென்றுள்ளனர். இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 17 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன், இதுகுறித்து கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் தாரமங்கலம் அருகே எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த ரமேஷ், கோகுல் ராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Readmore: இனி சேலத்தில் இருந்து வானிலை அறிவிப்புகள்!. ஏற்காட்டில் வரப்போகும் நவீன ரேடார்கள்!.