நிலுவையில் உள்ள 30 ஆயிரம் மின் இணைப்புகளை வரும் 2025 மார்ச் மாதம் வரை வழங்க மின்வாரியத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது

தமிழகத்தில் மொத்தம் உள்ள 23.56 லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கும் இலவச மின்சாரம் வழங்குவதால் மின்வாரியத்துக்கு ஆண்டுக்கு ரூ.7,280 கோடி செலவாகிறது. இதை தமிழக அரசு வழங்குகிறது. ஆண்டுதோறும் அரசு அனுமதிக்கும் எண்ணிக்கையில் மட்டுமே விவசாய மின்இணைப்புகள் வழங்கப்படுகின்றன. விவசாய இணைப்பு கேட்டு கடந்த 2021 மார்ச் வரை 4.54 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இதனால், அந்த ஒரே நிதி ஆண்டில் ஒரு லட்சம் மின்இணைப்புகளும், 2022-23-ல் 50 ஆயிரம் இணைப்புகளும் வழங்கப்பட்டன.

கடந்த ஆண்டில் 50 ஆயிரம் மின் இணைப்பு வழங்க அரசு அளித்த அவகாசம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்துவிட்டது. எனவே, அந்த ஆண்டில் வழங்கியது போக, இதர விண்ணப்பதாரர்களுக்கு இணைப்பு வழங்க அரசிடம் மின்வாரியம் அனுமதி கோரியது. இதைத் தொடர்ந்து, நிலுவையில் உள்ள 30 ஆயிரம் மின் இணைப்புகளை வரும் 2025 மார்ச் மாதம் வரை வழங்க மின்வாரியத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

Readmore: சேலத்தில் ஏரியில் மூழ்கியதில் 3 பேருக்கு நேர்ந்த சோகம்!. துணி துவைக்க சென்றபோது நிகழ்ந்த சம்பவம்!