சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்துகள் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. வெள்ளாளகுண்டம் பிரிவு அருகே சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சென்றுக்கொண்டிருந்தபோது, இணைப்பு சாலை வழியாக சென்ற மற்றொரு தனியார் பேருந்து திடீரென திரும்பியுள்ளது. அப்போது சேலம் சென்ற பேருந்தும் இந்த பேருந்தும் ஒன்றையொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் நல்வாய்ப்பாக 50க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர்.
மேலும் இந்த விபத்தில் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்து சிதறின. ஆத்தூரில் இருந்து சென்ற பேருந்தின் நடத்துனர் ஆகியோர் காயமடைந்தனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வாழப்பாடி போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Readmore: தலைக்கேறிய மதுபோதை!. தேவூர் அருகே பள்ளத்தில் விழுந்ததில் தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!