வரலாற்றில் இல்லாத அளவிற்கு பல்லாயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் பயன்பெறும் வகையில் புதிய தொழில் முதலீடு தமிழகத்தை நோக்கி வர இருப்பதாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தமிழகத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வழங்கும் வகையிலான தொழில் முதலீடு விரைவில் வர இருப்பதாகவும், இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்றும் கூறினார்.
சமீபத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அமெரிக்க சென்று பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில், தற்போது தொழில் முதலீடு வரும் என்ற அமைச்சரின் அறிவிப்பால் இளைஞர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Readmore: ஈரோட்டில் அதிர்ச்சி!. 3 நாட்கள் அடைத்து வைத்து சித்ரவதை!. தலித் பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடூரம்!