வரலாறு காணாத உச்சமாக, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை ஒரு நாள் உயர்வதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் அக்.16-இல் பவுனுக்கு ரூ.360 உயா்ந்து ரூ.57,120-க்கும், அக்.17-இல் பவுனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ.57,280-க்கும், அக்.18-இல் பவுனுக்கு ரூ.640 உயா்ந்து ரூ.57,920-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.
அதன்படி, ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.58,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.40அதிகரித்து ரூ.7,280-க்கு விற்பனையாகிறது. கடந்த நான்கு நாள்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,480 உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.105.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ. 100 உயர்ந்து ரூ.1,05,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் வெள்ளி விலை மீண்டும் ஏற்ற இறக்கத்தில் இருப்பதால் நடுத்தர மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.