சங்ககிரி அருகே மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய தம்பியை காற்றப்பாற்ற முயன்றபோது அண்ணன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வைகுந்தம் சுவதயாகாடு பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி சரஸ்வதி. இந்தநிலையில் சேகர் வீட்டில் ஒயரிங் வேலை செய்துகொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளார். இதனை கண்ட மனைவியும் அவரை காப்பாற்ற நினைத்தப்போது நிலைத்தடுமாறி கீழே விழுந்து சத்தம் போட்டுள்ளார்.
இதையடுத்து ஓடிவந்த அண்ணன் தனபால், சேகரின் உடலில் இருந்து மின்சார ஒயரை இழுத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் தனபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த சேகர், சரஸ்வதி இருவருக்கும் மகுடஞ்சாவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மின்சாரம் பாய்ந்ததில் தம்பியை காப்பாற்ற சென்று அண்ணன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Readmore: சாலையில் உலா வந்த ஒற்றை யானை!. அரசு பேருந்தை துரத்தியதால் பயணிகள் அச்சம்!