சேலத்தில் கணவரிடம் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருபவர் கோவிந்தராஜ் (38). இவரது மனைவி சங்கீதா (27). இவர்களுக்கு ரோகித் (8), தர்ஷினி (4) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். கொண்டலாம்பட்டி காவல் நிலையம் அருகே உள்ள காவலர்கள் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில், கணவன் – மனைவி இடையே கடந்த சில நாட்களாக சண்டை நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த சங்கீதா விபரீத முடிவை எடுத்துள்ளார். அதாவது குழந்தைகள் 2 பேருக்கும் விஷம் கொடுத்துவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த கொண்டலாம்பட்டி போலீஸ் உதவி கமிஷனருக்கு சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினவு உத்தரவிட்டு உள்ளார்.
Readmore: கனமழை பெய்யும்!. இன்று சேலம், தர்மபுரி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு அலர்ட்!.