சங்ககிரி அரசிராமணி குள்ளம்பட்டியில் நீர்வழி ஓடையை ஆக்கிரமித்து அனுமதியின்றி எரியூட்டும் தகனமேடை அமைப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த குள்ளம்பட்டி அரசிராமணி பிட் 1 பகுதியில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கான தண்ணீர், மேட்டூர் கிழக்கு கரை கால்வாயில் இருந்து கிளை கால்வாயாக பிரிந்து குள்ளம்பட்டி ஏரியை சென்றடைகிறது. ஆனால், கிழக்கு கரை கால்வாயில் இருந்து ஏரியை கடக்கும் நீர்வழி ஓடையை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் இருப்பவர்கள் சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். இதனை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், குள்ளம்பட்டி பகுதியில் செல்லும் புறம்போக்கு நீர்வழி ஓடையை தற்போது எரியூட்டு தகன மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதாவது, தகன மேடை அமைப்பதற்காக நீர்வழி ஓடையை ஆக்கிரமித்து அரசு அனுமதியின்றி கட்டுமான பனி நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் இந்த தகன மேடை அரசு புறம்போக்கு நிலத்தில் அமைப்பதால், எதாவது அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதிகாரிகள் உரிய முறையில் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Readmore: இனி அந்த வார்த்தையை பயன்படுத்தாதீங்க..!! அதெல்லாம் பச்சைப்பொய்..!! கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி..!!