தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடைபெற உள்ள நிலையில், சேலத்தில் இன்று த.வெ.க. நிர்வாகிகளுக்கு அரசியல் பயிலரங்கம் நடைபெற உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள நிலையில், மாநாட்டிற்கான மேடை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநாட்டுக் குழுக்கள் மற்றும் தற்காலிகத் தொகுதிப் பொறுப்பாளர்களுளுக்கு சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்மம்பாளையத்தில் இன்று (அக்.18) பயிலரங்கம், கலந்தாய்வு நடைபெறுகிறது.

தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில், இதுவரை தமிழ்நாட்டில் நடந்த மாநாடுகள் குறித்த பார்வை, கொள்கைகள், கருத்தியலை அணுகும் முறை, மாநாட்டைச் சிறப்பிப்பது. கொள்கைத் திருவிழா விளக்கவுரை, மாநாட்டுக் குழுக்களுக்கான கலந்தாய்வு ஆகிய தலைப்புகளில் பயிலரங்கு நடைபெற உள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில், “நம் கழகத் தலைவரின் அறிவுறுத்தல்படி, நமது முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழா குறித்த கலந்தாய்வு, சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள அம்மம்பாளையம் கொங்கு திருமண மாளிகையில், இன்று (18.10.2024) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.

Readmore: காவிரி நீர்ப்பிடிப்புகளில் மழை!. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19,495 கன அடியாக அதிகரிப்பு!.