எடப்பாடி ஆலச்சம்பாளையம் அருகே மர்மவிலங்கு கடித்து குதறியதில் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியானதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி ஆலச்சம்பாளையம் பாறைக்காட்டுமேடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். வழக்கம்போல், செவ்வாய்கிழமை அன்று மாலை நேரத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு கூட்டிச்சென்றுவிட்டு பட்டியில் அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து நேற்று அதிகாலையில், பட்டிக்கு சென்று பார்த்த செல்வராஜ் அதிர்ச்சியடைந்துள்ளார்.

அப்போது, மர்மவிலங்கு பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை கடித்து சென்றுள்ளது. இதில் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகின. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கால்நடை மற்றும் வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்மவிலங்கு ஆடுகளை கடித்து குதறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Readmore: இனி காத்திருக்க தேவையில்லை!. டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்!. மது பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்!.