தனது மனைவியிடம் அண்ணன் தகாத முறையில் நடந்து கொண்ட ஆத்திரத்தில் குழந்தைகளை கொன்றுவிட்டதாக கைது செய்யப்பட்ட தனசேகர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்
சேலம் பனமரத்துப்பட்டி ஒருவங்காடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி ராஜா. இவரது உறவினர் தனசேகர். இவர்களது தந்தையர்கள் இருவரும் அண்ணன் தம்பிகள். அதனால், இரு குடும்பத்தினரிடையே அடிக்கடி சொத்து தகராறு முன்விரோதம் காரணமாக தனசேகர் ராஜாவின் குழந்தைகளை வெட்டிக் கொலை செய்ததாக முன்பு கூறப்பட்டது.
இந்தநிலையில், தலைமறைவாக இருந்து சேலத்திற்கு தப்பியோட தனசேகரை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து இன்று கைது செய்தனர். இதையடுத்து அவர் அளித்த வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதில், ”அரளிப்பூ விவசாயம் செய்து வரும் தனசேகரனுக்கு ஜனனி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். ராஜாவின் வீடும், தனசேகரன் வீடும் அருகருகே இருக்கிறது.
இந்நிலையில் தம்பி தனசேகரனின் மனைவியுடன் ராஜா தவறான உறவு வைத்துக்கொள்ள முயற்சிகள் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காலையும் தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளார். இதுகுறித்து ஜனனி, கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தனசேகரன், நேராக அண்ணன் ராஜாவிடம் சென்று, ஏன் எனது மனைவியை அழைத்தாய்? என கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது அப்படித்தான் அழைப்பேன் என கூறி ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் மாலை 5.30 மணியளவில் நவீனாவும் தம்பி சுகனும் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு பூ பறிக்க சென்றனர். அப்போது தோட்டத்தில் தனியாக இருந்த சுகனிடம் தனசேகரன், உனது தந்தை எனது மனைவியிடம் தவறாக பேசுவது நியாயமா? இதனை தட்டிக்கேட்க மாட்டீர்களா?. என்று கேட்டுள்ளார் இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றியதையடுத்து சுகனை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். இதனை பார்த்த அக்கா நவீனாவையும் கொலை செய்துவிட்டு தனசேகர் தப்பியோடியுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
Readmore: இன்னும் வலுவிழக்கவில்லை!. சென்னைக்கு மீண்டும் ரெட் அலர்ட்!. வானிலை அப்டேட்!