மதுரையில் சேர்ந்த பெண், 3 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு கடம்பூர் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. இவர், 13 ஆண்டுகளாக துபாய் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். 38 வயதான நிலையில் திருமணமாகாத இருந்துள்ளார். இதனால், உறவினர்கள் சேர்ந்து மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை கடந்த ஆண்டும் திருப்பதிக்கு திருமணம் செய்துவைத்துள்ளனர்.

இருப்பினும், அப்பெண் தனது முதலாவது கணவர் தற்கொலை செய்துகொண்டதாகவும், தனக்கு பெண் குழந்தை உள்ளதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, திருமண செலவுகள் மற்றும் 15 பவுன் நகையையும் மனைவியிடமே திருப்பதி கொடுத்து வைத்திருந்த நிலையில், திருமணம் ஆகி 3 மாதத்திற்கு பிறகு மீண்டும் சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றுள்ளார்.பின்னர், மனைவிக்கு தொடர்பு கொண்டபோது, சரிவர பேசவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, வேலை பார்க்கும் இடத்தில் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டு திருப்பதி சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர், சொந்த ஊருக்கு சென்ற அவர் வீடு பூட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் மனைவி குறித்து விசாரித்ததில், 2வது திருமணத்தையும் மறைத்து சென்னையில் வேறொருவை மணந்து வாழ்ந்து வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் திருப்பதி புகார் அளித்துள்ளார். முதற்கட்ட விசாரணையில், முதல் கணவர் கார்த்திக் என்பவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏமாற்றி 3 திருமணங்களை செய்து நகை பணத்தை அபகரித்து சென்ற பெண், அவரது தந்தை மற்றும் உறவினர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்கவும் கமிஷனர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Readmore: ஆசை வார்த்தைக்கூறி சிறுமியை கொல்லிமலைக்கு அழைத்து சென்ற இளைஞர்கள்!. ஜூஸில் மயக்க மருந்து கலந்து அத்துமீறல்!