சேலம் கிச்சிப்பாளையத்தில் ஆசை வார்த்தைக்கூறி சிறுமியை கொல்லிமலைக்கு அழைத்து சென்ற ஜூஸில் மயக்கமருந்து கொடுத்து அத்துமீறிய 3 இளைஞர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

கிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த சிறுமி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், அதே பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞரிடம் பழகி வந்துள்ளார். இதையடுத்து, பெற்றோருக்கு தெரியாமல், கடந்த 8ம் தேதி நாமக்கல் கொல்லிமலைக்கு அந்த இளைஞருடன் சென்றுள்ளர். அந்த இளைஞரின் நண்பர்களும் இவர்களுடன் சென்றுள்ளனர்.

அங்குச் சுற்றிப் பார்த்துவிட்டு, ஓய்வு எடுப்பதற்காக, டிரஸ் சேஞ்ச் செய்வதற்காக ஒரு தனியார் ஹோட்டலில் ரூம் எடுத்துள்ளனர். இதனை பயன்படுத்திக்கொண்ட இளைஞர்கள், ஜூஸில் மயக்கமருந்து கலந்து சிறுமிக்கு கொடுத்துள்ளனர். சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்த சிறுமியிடம் 3 பேரும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக வீட்டில் யாரிடமாவது கூறினால் வீடியோ எடுத்து வைத்திருப்பதாகவும் அதை வெளியிட்டு விடுவதாகவும் அந்த இளைஞர்கள் மிரட்டி வந்துள்ளனர்.

ஆனால், நேற்று திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிறுமி பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமி அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட மூன்று பேரும் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Readmore: ஆந்திராவுக்கு திரும்பிவிட்டது!. சென்னை மக்களே!. சற்று இளைப்பாறுங்கள்!. வெதர்மேன் ட்வீட்!