கனமழை காரணமாக காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதையடுத்து, மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக, தமிழ்நாடு, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக கனமழை பெய்துவருகிறது. இதேபோல், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன்காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. அந்தவகையில், மேட்டூர் அணைக்கு நேற்று காலை 15,531 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து இன்று காலை 16,196 கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 92 அடியாக உள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.நீர் இருப்பு 54.96 டிஎம்சியாக உள்ளது.
Readmore: ஆந்திராவுக்கு திரும்பிவிட்டது!. சென்னை மக்களே!. சற்று இளைப்பாறுங்கள்!. வெதர்மேன் ட்வீட்!