காற்றழுத்த தாழ்வுநிலையில் இருந்து இன்று கனமழை பொழிய நமக்கு வாய்ப்பில்லை என்றும் சாதாரண மழை பெய்யலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழையையொட்டி, தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. மேலும், வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளது. இதன்காரணமாக சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் பக்கத்தில், காற்றழுத்த தாழ்வுநிலையில் இருந்து இன்று கனமழை பொழிய நமக்கு வாய்ப்பில்லை என்றும் சாதாரண மழை பெய்யலாம் என்று வெதர்மேன் பதிவிட்டுள்ளார். இது சென்னை வாசிகளிடையே சற்று நிம்மதியளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் தளத்தில், ‘சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மக்களுக்கு சில நல்ல செய்தி. சீரான மழை சிறிது நேரம் தொடரும். காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னையை தாண்டி கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், காற்றின் ஒருங்கிணைப்பு பகுதி கடக்கும்போது மாநிலத்தின் வடக்கே இருக்கும். அதனால் சென்னை மக்கள் சற்று இளைப்பாறலாம். முக்கிய காற்றழுத்த தாழ்வுநிலையில் இருந்து இன்று கனமழை பொழிய நமக்கு வாய்ப்பில்லை. சாதாரண மழை பெய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காற்றின் ஒருங்கிணைப்பு பகுதி தெற்கு ஆந்திராவுக்கு மாறிவிட்டது. காற்றழுத்த தாழ்வு நில தரையை நோக்கி நகர்வதை பொறுத்து, 18-20ம் தேதிகளில் சென்னையில் மழை பெய்யக்கூடும். அது சாதாரண சமாளிக்கக்கூடிய மழையாக இருக்கும், எனவே மேம்பாலங்களில் நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தை வீட்டிற்கு கொண்டு செல்லலாம் என்று தெரிவித்துள்ளார்.
Readmore: பருவமழை முன்னெச்சரிக்கை!. சேலத்தில் அமைச்சர் ராஜேந்திரன் நேரில் ஆய்வு!. அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்!