சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த எடப்பாடியில் இருந்து தண்ணீர்தாசனூர் செல்லும் பிரதான சாலையில் மேட்டூர் கூட்டு குடிநீர் குழாய் அமைந்துள்ளது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால், தண்ணீர்தாசனூர் பகுதியில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஏற்கனவே, இப்பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதற்கிடையே, கூட்டு குடிநீர் குழாயும் உடைந்துள்ளதால், சாலைகளில் பெருமளவு தண்ணீர் செல்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவொரு நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, அதிகாரிகள் விரைந்து வந்து குடிநீர் குழாயை ஆய்வு செய்து அதனை சீரமைத்து தர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
Read More : அதிகனமழை எதிரொலி!. பள்ளிகளுக்கு தொடர் விடுமுறையா?. துணை முதல்வர் கொடுத்த அப்டேட்!