கனமழை பெய்து வருவதால், தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டுக்கு மேடை அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால், திட்டமிட்டப்படி மாநாடு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் மாநாடு வருகிற 27-ந்தேதி விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை என்ற இடத்தில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி 85 ஏக்கர் நிலப்பரப்பில் மாநாட்டு பந்தல் அமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாநாட்டு பணிகளுக்காக வரவேற்பு குழு, உணவு, போக்குவரத்து குழு, வாகன நிறுத்த குழு உள்பட 27 சிறப்பு குழுவை கட்சி தலைவர் விஜய் நியமனம் செய்து உள்ளார். இந்த நிலையில் மாநாடு பணிகளுக்கென மேலும் 3 குழுக்களை விஜய் நியமனம் செய்துள்ளார்.

இந்தநிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மழை பெய்துவருகிறது. தமிழக வெற்றிக்கழகம் முதல் மாநில மாநாடு நடைபெறும் இடத்தில் சேரும் சகதியுமாக மாறியுள்ளது இதனால் மாநாடு பந்தல் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வருகின்ற 27-ஆம் தேதிக்குள் மாநாட்டுக்கான பணிகளை முழுமையாக முடிக்க முடியுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

Readmore: அதிகனமழை எதிரொலி!. பள்ளிகளுக்கு தொடர் விடுமுறையா?. துணை முதல்வர் கொடுத்த அப்டேட்!