அடுத்தடுத்த நாட்களில் அதிகனமழை பெய்யும் என்பதால், பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை குறித்து இன்று மாலைக்குள் முதல்வர் ஸ்டாலின் முடிவு எடுப்பார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட், ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

சென்னை எழிலகத்தில் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில், துணை முதல்வர் உதயநிதி ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின், சென்னையில் 89 படகு உட்பட பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 130 படகுகள் தயார் நிலையில் உள்ளன. ஒரு மணி நேரம் மழை நின்றால், கணேசபுரம், பெரம்பூர் சுரங்க பாதையில் தேங்கி மழை நீர் வெளியேற்றப்படும். சென்னைக்கு உதவ தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் தன்னார்வலர்கள் தயாராக இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் ஆயிரம் மருத்துவ முகாம்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பள்ளி விடுமுறை தொடர்பாக இன்று மாலைக்குள் முதல்வர் ஸ்டாலின் முடிவு எடுப்பார். மழை எச்சரிக்கை தொடர்பாக ஆய்வு செய்த பின் விடுமுறை குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடுவார் என்று கூறினார்.

Readmore: ரிசர்வ் வங்கி அதிகாரியுடன் பழக்கம்!. வேலைவாங்கி தருவதாக சேலம் இளைஞரிடம் ரூ.1.50 லட்சம் மோசடி!.