தண்ணீரில் உப்பை கலந்து குளிப்பதால் தசைகள் இலகுவாகி உடலுக்கு ரிலாக்ஷேசன் கிடைப்பது மட்டுமல்லாமல், நல்ல உடல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
தினசரி தலைக்கு குளிக்கும் போது மன அழுத்தம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. குளிக்கும் போது மன அழுத்த ஹார்மோன்களில் மாற்றம் ஏற்பட்டு மனநிலையை சீராக்க உதவுகிறது. தினமும் குளிப்பது ஒருவரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தலாம். நம்மில் பெரும்பாலானோர் தினமும் காலையில் குளிப்பதை விரும்புவர். ஒருவருக்கும் மன அழுத்தம் அதிகமாக இருந்தால் தசை வலி, இதய நோய், அஜீரணம், எடை அதிகரிப்பு போன்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகிறது.
அந்தவகையில், நீங்கள் தினம் குளிக்கும் தண்ணீரில் உப்பு கலந்து குளித்தல் நன்மைகள் பல கிடைக்கும் என்கின்றனர். அவை என்னென்ன பார்க்கலாம். சமையலுக்கு பயன்படுத்தப்படும் அதே கல் உப்பை, நீங்கள் குளிக்கும் தண்ணீரில் அளவுக்கு ஏற்ப 3 முதல் 10 கப் வரை சேர்க்கலாம் என்று கூறப்படுகிறது. சாதாரண நீர்த்தொட்டி அளவில் 1/4 கப் கடல் உப்பு சேர்க்கலாம் என ஹெல்த் லைன் இணையதளம் கூறுகிறது.அந்த தண்ணீரானது உங்கள் உடலின் வெப்பநிலையிலிருந்து 2 டிகிரி கூடுதலான வெப்பநிலையில் இருக்க வேண்டும். குறைந்தது அந்த உப்பு 15 – 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வேண்டும்.
இவ்வாறு குளிப்பதால் தசைகள் இலகுவாகி உடலுக்கு ரிலாக்ஷேசன் கிடைக்கிறது. உடல் வலி, தசை வலி இருந்தாலும் சரியாகும். ஹெவி ஒர்க் அவுட், கடின உழைப்பு, உடல் அசதி போன்ற நேரத்தில் இந்த கடல் உப்பு குளியல் நல்ல பலன் தரும் என்று ஹெல்த் லைன் இணையதளம் கூறுகிறது. அதுமட்டுமன்றி சருமத்திற்கும் நல்ல ஆரோக்கியம், ஹெல்தியான சருமத்தைப் பெறலாம். அதோடு இரத்த ஓட்டம் சீராவதால் சருமம் பொலிவாக மாறுவதையும் உணர முடியும். குறிப்பாக, இந்த கடல் உப்பு குளியல் சிலருக்கு ஒவ்வாமையை உண்டாக்கலாம். சருமத்தில் அரிப்பு, எரிச்சல் போன்ற ஏதேனும் மாற்றம் தெரிந்தால் தவிர்ப்பது நல்லது.
Readmore: பள்ளிகள் லீவு!. ஆன்லைன் வகுப்புகளுக்கு ட்விஸ்ட் வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!