அனைவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து, ஒற்றுமையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கருத்து தெரிவித்துள்ளார்.

ஓமலுாரில் சேலம் புறநகர் மாவட்டம், ஓமலுார் சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., ஓமலுார் மேற்கு ஒன்றியம், தாரமங்கலம் வடக்கு ஒன்றியம் சார்பில் செயல் வீரர்கள் கூட்டம், எம்.எல்.ஏ., மணி தலைமையில் நேற்று நடந்தது. இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ”சட்டசபை தேர்தலில் இ.பி.எஸ்., நல்ல கூட்டணி அமைப்பார்; கவலை வேண்டாம். மனகசப்புகளை மறந்து அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்றிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேபோல், சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசியதாவது, இ.பி.எஸ்., ஆட்சியில் ஓமலுார் தொகுதியில் மட்டும், 500 கோடி ரூபாய்க்கு, தார் சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போதைய ஆட்சியில் சொத்து வரி, மின்சார கட்டணம் உயர்வு, ஒரு கிலோ அரிசி விலை, 80 ரூபாய் என்பது உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை உயர்வால் மக்கள் துன்பப்படுகின்றனர் என்று குற்றம்சாட்டினார்.

Readmore : சேலத்தில் அதிர்ச்சி!. சொத்து தகராறில் பள்ளி மாணவர்கள் வெட்டிக்கொலை!. அக்கா, தம்பிக்கு நேர்ந்த சோகம்!.