எடப்பாடி தொகுதியில் ரூ.5.09 கோடி மதிப்பில் சுகாதார மையத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ராஜேந்திரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சேலம் மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் சேலம் வந்தார். நேற்று ஓமலூர் மற்றும் ஏற்காடு ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். இரவு ஏற்காட்டில் தங்கிய அவர், இன்று சேலத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடகிழக்கு பருவமழையும் கூடுதலாக பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் அதனால் எல்லாத்துறைகளும் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் முதல்முறையாக அனைத்து சேவைத்துறைகளும் ஒருங்கிணைந்து கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. நோய் பாதிப்பு தடுப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. கிராமத்தில் ஒருவருக்கு மேல் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அங்கு மருத்துவ முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்தவகையில், தமிழகம் முழுவதும் இன்று 1000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது என்றும் சேலத்தில் 20 இடங்களிலும் சென்னையில் 100 இடங்களிலும் நடைபெறவுள்ளது என்றும் இதில் மக்கள் கலந்துகொண்டு பரிசோதனைகளை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
இதனை தொடர்ந்து எடப்பாடி தொகுதிக்கு சென்ற அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ராஜேந்திரன் ஆகியோர், சுமார் 5.09 கோடி மதிப்பிலான சுகாதார மையங்களை திறந்துவைத்தனர். அதாவது, பெரியசோரகை, நரியம்பட்டி, தானவதியூர் ஆகிய இடங்களில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலும், பாலப்பட்டியில் ரூ.35 லட்சமும், மேட்டூர் தொகுதி கோல்நாயக்கன்பட்டியில் ரூ.35 லட்சம் மதிப்பில் சுகாதார மையங்களை திறந்து வைத்தனர்.
Readmore: விவசாயிகளே!. உடனே இத பண்ணிடுங்க!. ரூ.65 கோடி மானியம்!. மத்திய, மாநில அரசுகள் சூப்பர் அறிவிப்பு!