சிறுதானியங்கள் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கும் நிலையான வருமானம் கிடைப்பதை கருத்தில் கொண்டு, நடப்பாண்டு மானிய உதவிகளுக்காக, 65 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் விளையும் கம்பு, கேழ்வரகு, வரகு, தினை, குதிரைவாலி, சாமை உள்ளிட்ட சிறுதானியங்களுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்தவகையில், சிறுதானியங்கள் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கும் நிலையான வருமானம் கிடைப்பதை கருத்தில் கொண்டு, நடப்பாண்டு மானிய உதவிகளுக்காக, 65 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமல்ல, இந்த மானியத்தை விவசாயிகள் உழவன் மொபைல் செயலியில் முன்பதிவு செய்து கொண்டு பலன் பெறலாம் என்றும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் சிறுதானிய இயக்கம் தற்போது 25 மாவட்டங்களில் செயல்பட்டு வரும்நிலையில், இத்திட்டத்தின்கீழ் விவசாயிகள் குழு உருவாக்குவதற்காக 1000 ரூபாய், சிறுதானிய தொகுப்புகளை உருவாக்க, பழங்குடியின விவசாயிகளுக்கு ஏக்கருக்கு, 840 ரூபாய், மற்ற விவசாயிகளுக்கு, 600 ரூபாய், இயற்கை உரங்கள் வாங்க, ஏக்கருக்கு, 480 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
இந்த மானியத்தை பெற விவசாயிகள், உழவன் மொபைல்போன் செயலியில் முன்பதிவு செய்யலாம். அல்லது உதவி வேளாண் அலுவலர்கள், துணை வேளாண் அலுவலர்கள், வேளாண் உதவி இயக்குனர்களையும் விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம் என்று வேளாண் துறை அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Readmore: மாணவர்களே ரெடியா?. பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்!. முழுவிவரம் இதோ!